நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் மேலும் ஒரு விபத்து : 11 பேர் காயம்..!
கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

