நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி 2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கருத்திற்கொண்டு உரியமுறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.


