Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its remarkable sporting legacy with a standout performance at the 40th Annual Mercantile Athletics Championships 2025, bringing home the prestigious Overall Runners-Up title for the eighth year running. Competing over three action-packed days on 14th, 15th and 16th November 2025 at…
சர்வதேச SUV முன்னோடியான – Jetour – இலங்கையில் Euro Motors உடன் உயர் வடிவமைப்பு, தொழினுட்பம் மற்றும் ஒப்பற்ற பெறுமதியுடன் அறிமுகம்.
இலங்கையின் வாகனங்கள் விற்பனை தொழிற்துறையில் மற்றுமொரு முன்னேற்றகரமான திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Jetour வாகனங்களுக்கான இலங்கையின் ஏக விநியோகத்தராக, இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நம்பிக்கையை வென்ற Euro Motors நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Jetour வாகனத் தெரிவுகளில், அதிகளவு நாடப்படும் Jetour Dashing (5-seater) மற்றும் Jetour X70 Plus (7-seater) ஆகியவற்றை Euro Motors விநியோகிக்கிறது. இந்த இரு SUVகளும் 1.5L பெற்றோல் என்ஜினைக் கொண்டுள்ளதுடன், உயர் தொழினுட்பம், சிறந்த சௌகரியம், கண்கவர் வடிவமைப்பு மற்றும் ஒப்பற்ற இடவசதிகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. அதனூடாக இலங்கையில் SUV வாகனமொன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போரின் நிகரற்ற தெரிவாக Jetour ஐ திகழச் செய்துள்ளது.
JAC, Dongfeng, Ankai மற்றும் Bonluck போன்ற சர்வதேச ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற வாகன வர்த்தக நாமத் தெரிவுகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர் எனும் நிலையைக் கொண்டுள்ள Euro Motors, தரம் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளதுடன், விற்பனைக்கு பின்னரான சேவையிலும் தொடர்ச்சியாக உயர்ந்த நிலையை பேணி வருகிறது. இதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த Jetour சேவை நிலையம் மற்றும் நவீன வசதிகளுடனான காட்சியறை ஆகியவற்றிலும் Euro Motors முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அதனூடாக, Jetour வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனை மற்றும் பராமரிப்பு சேவை அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்கிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் தொடர்பில் Euro Motors இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரவீந்திர சேனாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் Jetour வாகனத் தெரிவுகளை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் SUV வர்த்தக நாமங்களில் ஒன்றாக Jetour அமைந்துள்ளது. இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை மட்டும் வழங்குவதில் Euro Motors ஐச் சேர்ந்த நாம் கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக ஒப்பற்ற பெறுமதி, தரம் மற்றும் புத்தாக்கத்தை வழங்கும் தயாரிப்புகளை பெற்றுக் கொடுக்கிறோம். இலங்கையின் வாகனங்கள் துறையில் புதிய யுகத்தின் ஆரம்பமாக இது அமைந்திருப்பதுடன், Jetour மற்றும் Euro Motors ஆகியன இணைந்து சர்வதேச வலிமை மற்றும் உள்நாட்டின் நம்பிக்கையுடன், இலங்கையின் SUV சந்தையை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்.” என்றார்.

நகரில் பயணம், குடும்ப பிரயாணம் அல்லது சாகசப் பயணம் என அனைத்திலும், மதிநுட்பமான தொழினுட்பம், உயர்ந்த தோற்றம் மற்றும் பயன்படுத்த சுலபமான தன்மை போன்ற அம்சங்களை எதிர்பார்க்கும் தற்கால நுகர்வோரின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் Jetour வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தக நாமத்தினூடாக உயர் SUV அனுபவத்தை சிக்கனமான முறையில் பெற்றுக் கொள்ள முடிவதுடன், 4 வருடங்கள் அல்லது 100,000 கிலோமீற்றர் உத்தரவாதத்தையும் வழங்கப்படுவதால், சகல வாடிக்கையாளர்களுக்கும் பெருமளவு மனநிம்மதியும் வழங்கப்படுகிறது. கவர்ச்சிகரமான நிதிசார் மற்றும் சேவை பக்கேஜ்கள் வழங்கப்படுவதால், Jetour வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களில்லாத மற்றும் சுலபமான வாகன கொள்வனவு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆரம்பிக்கப்பட்டது முதல், சர்வதேச ரீதியில் 65 க்கும் மேலான நாடுகளில் சிறந்த விற்பனை பெறுபேறுகளை Jetour கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா, கட்டார், இந்தோனேசியா, மலேசியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் வர்த்தக நாமம் துரித வளர்ச்சியை எய்தி, சந்தை தலைமைத்துவத்தையும் கொண்டுள்ளது. மேலும், உலகளாவிய ரீதியில் 2000 க்கும் அதிகமான விற்பனை மற்றும் சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மாத்திரம், உலகளாவிய ரீதியில் 80% விற்பனை வளர்ச்சியை Jetour எய்தியுள்ளது. அதனூடாக, அதன் உறுதித் தன்மை மற்றும் சர்வதேச நம்பிக்கை மீள உறுதி செய்யப்பட்டுள்ளன. Jetour தெரிவுகள், சர்வதேச வர்த்தக நாமங்களுடன் நிகரானவையாக அமைந்திருப்பதுடன், தரம், வினைத்திறன் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றில் சிறப்பை வழங்கி, உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. Jetour SUV வாகனங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள 011-4504504 / 076-6199399 உடன் தொடர்பு கொள்ளலாம்.

