இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் ‘சாதனையாளர்கள் இரவு 2025’ (Achiever’s Night 2025)

சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் (SDF) பிஎல்சி, அதன் வருடாந்த ஊழியர் விருது வழங்கும் விழாவான ‘சாதனையாளர்கள் இரவு 2025’ ஐ கடந்த 2025 மே மாதம் 10ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள Monarch Imperial இல் நடத்தியது. இந்த நிகழ்வானது நாடு முழுவதும் உள்ள பணியாளர்களின் மேம்பட்ட பங்களிப்புகளைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வில் அதன் தலைவரும் பணிப்பாளர் சபை உறுப்பினருமான திருமதி. நீதா ஆரியரத்ன மற்றும் லங்கா ஜாதிக சர்வோதய ஷ்ரமதான சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர் வின்யா ஆரியரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் உட்பட 600இற்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒரு சிறப்புமிக்க கொண்டாட்டமாகவும், இலங்கையில் துரிதமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனத்தின் எழுச்சியை எடுத்துக்காட்டுவதாகவும் இந்த மாலைப் பொழுது அமைந்தது.
சிறந்த வர்த்தக அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறந்த கிளை முகாமையாளர் மற்றும் சிறந்த பிராந்திய முகாமையாளர், சிறந்த கடன்மீட்பு உத்தியோகத்தர், சிறந்த பிராந்திய கடன்வமீட்பு உத்தியோகத்தர், சிறந்த வைப்புத்தொகை அதிகாரி, சிறந்த தங்கக் கடன் அதிகாரி உள்ளிட்ட முக்கிய செயற்திறன் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட சிறந்த செயற்திறன் கொண்ட வெற்றியாளர்களுக்கு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வதற்கான வெகுமதிகளும் வழங்கப்பட்டன. பணியாளர்களின் மேம்பாட்டிலும், தலைமைத்துவ திறன் விருத்தியிலும் சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் மேற்கொள்ளும் முதலீட்டினை இந்த செயன்முறை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் திரு. நிலந்த ஜயநெட்டி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்:
“சாதனையாளர் இரவு என்பது ஒரு கொண்டாட்டத்தை விட மேலானது. இது எமது குழுவினரின் தினசரி அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அவர்கள் உருவாக்கும் தாக்கத்தின் பிரதிபலிப்பாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைவதால் நிதித் துறை வேகமாக மாறி வருகின்றது. ஆனால் நாங்கள் இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை நம்புகின்றோம்: மக்கள் நாம் செய்யும் செயல்களுக்கு அர்த்தம் தருகின்றனர். இலங்கையின் கிராமப்புறங்களுக்கு, கண்ணியம், பொருத்தப்பாடு மற்றும் மீள்தன்மையுடன் கூடிய சேவையை வழங்குவதற்கு, எமது குழுவின் வலுவான அர்ப்பணிப்பு உதவுகின்றது”
நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றக் காலத்திற்குப் பின்னரே இந்த விருதுவிழா நடைபெற்றது. வெளிப்படைத்தன்மை, நிலைபேறுமிக்க தன்மை மற்றும் சமூக சமத்துவத்தை ஆதரிக்கும் நிதி நிறுவனங்களின் Global Alliance for Banking on Values (GABV) முழுமையான அங்கத்தவராக, அண்மையில் சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் இணைந்துகொண்டது. 2024/25 நிதியாண்டிலும் நிறுவனம் வலுவான நிதி செயற்திறனைக் காட்டியது. வர்த்தக வெற்றியையும் சமூக தாக்கத்தையும் ஒருங்கிணைக்கும் முறை முற்றிலும் செயற்படக்கூடியது என்பதை இது நிரூபிக்கின்றது.

சர்வோதய டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி நிதி மாதிரியுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது அணுகல், நம்பிக்கை மற்றும் நீண்டகால வலுப்படுத்தல் செயற்பாட்டில் கவனம் செலுத்துகிறது. அதன் பணியாளர்களின் தரத்தையும், அதன் மூலோபாயத்தை வழிநடத்தும் மதிப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில், ‘சாதனையாளர்களின் இரவு 2025’ நிகழ்வு நடைபெற்றது.