டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பம்பரகலை வரையும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுகிறது.
அவ்வப்போது ஏற்படும் அடர்ந்த பனிமூட்ட நிலை காரணமாக, இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும்போது, வாகனங்களின் முன்பக்க பிரதான விளக்குகளைப் பயன்படுத்தி, மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.