அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
சீனப் பொருட்களுக்கு 145% வரி – அமெரிக்கா விளக்கம்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (9) விதித்த 125% வரி குறித்து விசேட விளக்கத்தை அளிக்கும் போதே இந்த தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
சீனப் பொருட்களுக்கு முன்னர் இருந்த 20% வரி விகிதம் உள்ளீர்க்கப்படாமலேயே வரி குறித்து நேற்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதன்படி, சீனாப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விகிதம் 145% என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.