1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொலை அலை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொல்லும் கலாச்சாரம் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எமது கட்சியின்…
டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்.

டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது.
கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது.
மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.