சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை

காலி, பெரலிய பகுதியில் சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை.

எனினும், பேரழிவை நினைவுகூரும் வகையில், ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் ரயிலை இன்று வெள்ளிக்கிழமை  (26) வேறு ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி மாத்தறைக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சேதமடைந்த இயந்திரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தொழில்நுட்பக் கோளாறினால்  இம் முறை இயக்கப்படவில்லை. இயந்திரத்தின் அச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய தினம் காலை இயக்கப்படவில்லை என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2 thoughts on “சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *