ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
ஜனசக்தி பைனான்ஸ், 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 35% நிகர தொழிற்பாட்டு வருமான வளர்ச்சியையும், ரூ.389 மில்லியன் வரிக்கு முந்திய இலாபத்தையும் பதிவு செய்துள்ளது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்று அழைக்கப்பட்டதுமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி 2025 டிசம்பர் 31, அன்று முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் வலுவான நிதி செயல்திறனை அறிவித்துள்ளது. அதன் முக்கிய வணிகங்களில் நிலையான வளர்ச்சி, நெறிமுறையான செயலாக்கம், விரிவாக்கம் மற்றும் செயல்திறனில் தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றால் இது சாத்தியமானது.
இந்த பெறுபேறுகள் குறித்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா கூறுகையில், “இக் காலகட்டத்திற்கான செயல்திறன் வெளிப்பாடு, நமது மூலோபாய முன்னுரிமைகளின் தெளிவையும் நிர்வாகக் கட்டமைப்பின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. தன்னம்பிக்கையுடன் வணிகத்தை வழிநடத்தும் உறுதியான தலைமையுடன் நாம் திடமாக வளர்ச்சியடைவதோடு, நிதியறிக்கைகளின் உறுதிப்பாட்டையும் பங்குதாரர்களின் நம்பிக்கையையும் நாம் பராமரித்து வருகின்றோம்.”என்று குறிப்பிட்டார்.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலகட்டத்தில், வரிக்கு முந்திய இலாபம் (PBT) முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 39%ஆல் அதிகரித்து ரூ.389 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு அதிக தொழிற்பாட்டு வருமானம் மற்றும் சேவைத் தொகுதியின் விரிவாக்கம் ஆகியன பங்களித்துள்ளன. நிகர தொழிற்பாட்டு வருமானம், முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35%ஆல் அதிகரித்து ரூ.2.2 பில்லியனை எட்டியுள்ளது. இது நிலையான கடன் நடவடிக்கை மற்றும் மேம்பட்ட வணிக விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது. வரிக்குப் பின்னரான நிகர இலாபம் (NPAT) ரூ. 240 மில்லியன் ஆகும்.
நிறுவனத்தின் கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகளின் தொகுப்பு முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49%ஆல் அதிகரித்து ரூ.29 பில்லியனை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய கடன் பிரிவுகளில் தேவை அதிகரித்தமை மற்றும் அவதானமிக்க வளர்ச்சி முன்னெடுப்புகள் என்பன காரணமாக அமைந்தன. வைப்புத்தொகை ரூ.17 பில்லியனாக அதிகரித்ததோடு நிதி பன்முகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இது முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 14% வளர்ச்சி ஆகும்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் இவ் வருடத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகையில், “இக் காலகட்டத்தில், எங்கள் கடன் வழங்கல்களை பொறுப்புடன் விரிவுபடுத்தல், எங்கள் நிதி வழங்கல் தளத்தை வலுப்படுத்தல் மற்றும் நடவடிக்கை செயற்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். நாம் எமது நடுத்தர தவணை மூலோபாய செயலாக்கத்தை தொடர்ந்தவாறு சந்தை வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வேளையில் எங்கள் முக்கிய குறிகாட்டிகளில் அடையப்பட்ட வளர்ச்சியானது நிறுவனத்தை வலுவாக நிலைநிறுத்துகின்றது.” என்றார்.
எதிர்காலத்தில், ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, விவேகமான இடர் முகாமைத்துவம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் அதன் ஊழியர்கள் மற்றும் தளங்களில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவற்றின் ஊடாக நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த முன்னேற்ற வேகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், பங்குதாரர்களுக்கு நிலையான மதிப்பை வழங்கவும், வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் நிதித் தேவைகளை ஆதரிக்கவும் நிறுவனம் மிக உறுதியான நிலையில் உள்ளது.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ்வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

Thinking about trying out AE48888 as I found it on Aeum888.com. Lots of live casino games, maybe too many, haha! Anyone has a great experience? Take a peek here ae48888.
BetVN01 looks promising. Just signed up using Betvn01.info. Good promos and a big selection of games. Hopefully, their customer support is decent. Find it here betvn01.
Seen a few ads for BK8BK8XO on Bk8Bk8xo.com. Supposedly huge bonuses, but read the fine print! I may give it a shot this weekend. You can find them here bk8bk8xo.