இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
ஜனாதிபதி அலுவலக 26 அதிசொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்…!

ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக, சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் கடந்த 10 வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கமைவான விலைமனுக் கோரல் நேற்றுடன் நிறைவடைந்தது.
அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.