SELVE is an innovative, spoken English app designed to make English communication more accessible through real-time AI-driven support. Developed by the Selvern Trust for people whose career advancement has slowed due to a lack of confidence in speaking English, SELVE functions as an interactive platform to resolve these language barriers. Available for download with a…
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக் கொண்டஅதிநவீன SUV ரக வாகனமான BYD SEALION 8 இலங்கையில் அறிமுகம்
இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD, அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன ‘BYD SEALION 8’ ரக வாகனத்தை 2026 மார்ச் 10ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற விசேட அங்குரார்ப்பண நிகழ்வின் போது, BYD நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான ஏழு ஆசனங்களைக் கொண்ட ‘பிளக்-இன் ஹைப்ரிட்’ (Plug-in Hybrid) மின்சார SUV ரக ‘SEALION 8’ வாகனம் உள்ளூர் சந்தைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக, சர்வதேச ரீதியில் இப்புதிய ரக வாகனத்தை அறிமுகப்படுத்திய முதல் சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகத் திகழ்வதுடன், உயர் செயல்திறன் கொண்ட ‘DM-p’ (Dual Mode Performance) மாதிரியும் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன, “SEALION 8 ரக வாகனத்தை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் சந்தைகளில் ஒன்றாக இலங்கை விளங்குவது, இந்நாட்டுச் சந்தை மீது BYD நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் எமது முதல் வாகன விநியோகத்தை ஆரம்பித்தது முதல், இலங்கை வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அபரிமிதமான வரவேற்பின் மூலமே இந்த நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

“8,500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது எமது வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையர்கள் புதிய சக்தி வாகன மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. BYD நிறுவனத்தின் அதிசிறந்த தயாரிப்புகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான எமது பதிலாகவும், அதேநேரம் ஒரு நிலைபேறான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதாகவும் இந்த மேம்பட்ட ‘DM-p’ ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைக் கொண்ட SEALION 8 அமையும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் BYD நிறுவனத்தின் வாகனத் தொகுப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக ‘BYD SEALION 8’ இணைந்துள்ளது. வாகனத்தின் செயல்திறன் அல்லது பன்முகத்தன்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், அதிக இடவசதி மற்றும் நடைமுறைப் பயன்பாடு கொண்ட ஏழு ஆசனங்கள் கொண்ட வாகனத்தை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்காகவே இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) வாகனமான இது, அன்றாடக் குறுகிய தூரப் பயணங்களுக்குத் தேவையான மின்சார உதவியையும், அடிக்கடி தரித்து நிற்க வேண்டிய அவசியமின்றி நாடு தழுவிய நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதற்குத் தேவையான ஒட்டுமொத்தப் பயணத் தூரத் திறனையும் வழங்கி, இலங்கைச் சந்தைக்கு ஒரு மிகச்சிறந்த நடைமுறைத் தீர்வாக அமைகிறது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் வர்த்தக மற்றும் வாகனத் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் என பலரும் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது, SEALION 8 வாகனத்தின் ‘Dynamic (DM-i)’ மற்றும் ‘Premium (DM-p)’ ஆகிய இரண்டு மாதிரிகளும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, BYD நிறுவனத்தின் ‘Dual Mode Performance’ கட்டமைப்பைக் கொண்ட ‘DM-p’ மாதிரியின் அறிமுகம் அமைந்திருந்தது. இது சக்திவாய்ந்த ஓட்டுநர் செயல்திறனையும், அன்றாட குடும்ப பயன்பாட்டிற்கான வசதியையும் சமநிலைப்படுத்தும் மேம்பட்ட “Performance Hybrid” அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

DM-i (Dual Mode Intelligent) மாதிரி வாகனமானது எரிபொருள் சிக்கனத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை, DM-p மாதிரி வாகனமானது டர்போசார்ஜ் (turbocharged) செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின், இரட்டை மின்சார மோட்டார்கள் மற்றும் அறிவுசார்ந்த ஆல்-வீல் டிரைவ் (Intelligent All-Wheel Drive) வசதிகளைக் கொண்டுள்ளது. இது வாகனத்தின் பயண தூரத்தில் எவ்வித சமரசமும் இன்றி, 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 4.9 செக்கன்களில் எட்டக்கூடிய அதிவேக செயல்திறனை வழங்குகின்றது.
SEALION 8 வாகனத்தின் இரண்டு மாதிரிகளுமே ஒட்டுமொத்தமாக 1,118 கி.மீ வரையான பயணத்தூரத்தை வழங்குகின்றன. இது அன்றாடப் பயணங்களுக்கு மின்சார உதவியுடனான எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன், நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பயணித்து மீண்டும் திரும்புவதற்குத் தேவையான நீண்ட தூரப் பயண ஆற்றலையும் கொண்டுள்ளது.
BYD SEALION 8 இன் உட்புற வடிவமைப்பானது அதன் ஓட்டுநர் செயல்திறனுக்கு நிகராக மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 15.6 அங்குல தொடுதிரை (infotainment system) மற்றும் 21 ஸ்பீக்கர்களைக் கொண்ட அதிநவீன ஒலி அமைப்பு (Surround sound system) ஆகியவை இதன் உட்புறத்திற்கு உயிரூட்டுகின்றன. இதில் மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய ஆசனங்கள், மின்சாரத் திரையுடன் கூடிய ‘பானரோமிக் சன்ரூஃப்’ (Panoramic sunroof) மற்றும் 1,960 லீற்றர் கொள்ளளவு கொண்ட பாரிய இடவசதி என்பன காணப்படுகின்றன. இவை இவ்வாகனத்தை வார இறுதி குடும்ப சுற்றுலாக்களுக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஒருங்கே பொருத்தமானதாக மாற்றுகின்றன. பாதுகாப்பு அம்சங்களிலும் எவ்வித சமரசமும் இன்றி, 9 எயார்பேக்ஸ் (Airbags), நான்கு வலய உணரிகளுடன் ((Sensors) கூடிய 360° மற்றும் வாகனத்திலிருந்து வெளிப்புற சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய V2L தொழில்நுட்பம் ஆகிய நவீன வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
BYD SEALION 8 தற்போது இலங்கை முழுவதுமுள்ள அனைத்து BYD காட்சியறைகளிலும் கிடைப்பதுடன், இது Dark Aquamarine, Ridge Grey, Arctic White மற்றும் Cosmos Black ஆகிய நான்கு நிறங்களில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

