Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
நவம்பர் மாதம் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் இலங்கையில்!
2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,541 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவிலிருற்து 8,220 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,515 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,093 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 577 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
