நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு
நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு சட்டப்பூர்வ உரிமம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பிரபலமான தொழிலதிபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

