டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.
நேற்று (22) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவி தற்போது 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது.
புதிய கணக்காய்வாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்த பெயருக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கவில்லை.
இதன்படி, பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரசியலமைப்புச் சபையிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது