இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் இராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்
.
“ஒட்டுமொத்த தேசமும் அதன் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது, எங்கள் மன உறுதியும் அசைக்கப்படாமல் உள்ளன. பாகிஸ்தான் மக்களும் அதன் படைகளும் எங்கள் வலிமை மற்றும் உறுதியுடன் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் முழுமையாகத் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை 2 பெண் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்தனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

