நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு இடையில் தகராறு ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி வரும் நிலையில் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து சில நாட்களாக பல்கலைக்கழக விடுதியில் பட்டாசு வெடித்து விளையாடியுள்ளனர்.
இதனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு எல்லை மீறியதால் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Yo, NustargamePH! This one’s geared toward the Philippines, yeah? Fast payouts and a decent selection of local games. Check it out, kabayan! nustargameph.
Cần link 188bet mới nhất hả? Link188betmoinhat là chuẩn bài rồi! Chơi mượt mà, không lo bị chặn. Anh em vào chiến thôi! Check out link188betmoinhat