டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பாம்பை விட்டு கணவரை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.
அண்மையில் தனது கணவனை, மனைவி அவரின் சட்டத்திற்கு புறம்பான உறவில் இருந்த காதலனின் உதவியுடன் கொலை செய்து சிமெந்து நிரப்பப்பட்ட கொள்கலனில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியால் மர்மமான முறையில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூலித் தொழிலாளியான அமித், அவரது படுக்கையில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். முதலில் பாம்பு கடித்தமையால் அவர் உயிரிழந்ததாக நம்பப்பட்டது.
பாம்பு ஒன்று அவரின் உடலை தீண்டும் வகையிலான காணொளி ஒன்று வெளியான நிலையில், இந்த நம்பிக்கை மேலும் வலுப்பெற்றிருந்தது. எனினும், பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.
இதன்படி, தடயவியல் அறிக்கையில், பாம்பு தீண்டுவதற்கு முன்னர் அமித் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பாம்பு கொலையை மறைக்க பயன்படுத்தப்பட்ட கருவி என்பது விசாரணையில் வெளியானது.
அமித்தின் மனைவியின் பொலிஸார் முன்னெடுத்த தீவிர விசாரணையில், அமித்தின் கொலைக்கு தனது காதலனின் உதவியுடன் சதி செய்ததை ஒப்புக்கொண்டார்.
கொலை நடந்த இரவு, அமித் தூங்கிக் கொண்டிருந்தபோது, இருவரும் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணத்தை திசைதிருப்ப, அவர்கள் 1000 ரூபாவிற்கு பாம்பை வாங்கி அமித்தின் உடலில் விட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த அமித்தை 10 முறை கடிக்க பாம்பு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமித்தின் மனைவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.