நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ஓட்டங்களை விளாசியது.
இது ஐபிஎல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக குவித்த 277 ஓட்டங்கள் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலக அளவில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 250 ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.

