பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.

புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.