First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…
“புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்” பெப்ரவரி 04 ஆம் திகதி ஆரம்பம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும்.
அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
புனித சின்னங்களை பெப்ரவரி 04 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொது மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.
பெப்ரவரி 04 ஆம் திகதி இந்தியாவிலிருந்து புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அவை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும் வரை தேவையான வசதிகள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் அவை தொடர்பான திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
புனித சின்னங்களை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தருவதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் தெரிவித்தார்.



**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.