இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நோய் குறித்த அறிவிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது.
அவருக்கு இன்னும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் காரணமாக அவருக்கு செயற்கை ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், போப்பின் தற்போதைய நிலையை அறிய இன்னும் 24 மணிநேரம் அல்லது 48 மணிநேரம் தேவை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்