நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர்.
அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த “சத்சர நிமேஷ்” என்கின்ற 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மருத்துவமனை தாதி தொடர்பான பாடத்திட்டத்தை கற்று வருகின்றார். குறித்த இளைஞன் ஒரு நடனக் கலைஞர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.