இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர்.
“தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார்.
வெள்ளிக்கிழமை(ஜூன் 13) காலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது, இதில் ஈரானின் இராணுவத் தலைமையின் உயர்மட்டத்தை அழித்தது மற்றும் அதன் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியதோடு அணு ஆராச்சி விஞானிகளும் கொல்லப்பட்டனர், இதனால் இந்த போர் சூழல் மேலும் சில தினங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறுகிறது.
நீண்டகால எதிரிகளுக்கு இடையேயான மிகப்பெரிய மோதலாக உருவெடுத்துள்ள இந்த மோதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “நரகத்தின் வாயில்களைத் திறப்பதாக” ஈரான் சப