நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.46 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

