65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் கைது!
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தாய்லாந்து பெண்கள் உட்பட ஏழு பேர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விபச்சார விடுதிக்கு உதவியதாக கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஆறு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் வாதுவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர்கள் 29 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


69vn15? Not immediately familiar, but always up for trying something new. Hopefully they have some decent sign-up bonuses. Link is below: 69vn15