மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…
கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் . தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)தமிழ் காங்கிரஸ் 12…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஹம்பாந்தோட்டை - ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக்…
காலி - ஹிக்கடுவை நகர சபைக்கான தேர்தல் முடிவு நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் காலி - ஹிக்கடுவை…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கண்டி - வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக்…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு - மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக்…