இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
மின்தூக்கியினுள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பத்திரமாக மீட்ப்பு

இன்று(ஜூன் 28) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியொன்றில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்திரானி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோரே இவ்வாறு மின்தூக்கியில் சிக்கிச் கொண்டுள்ளனர்.
கொழும்பில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும்போது மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப ஊழியர்கள் வேகமாக சிரத்தையோடு செயற்பட்டு மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.