நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு
புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று இன்று(வெப்ரவரி 14) யாழ்மட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.


