டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
முதல் நாளில் சூரியின் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல்

சம்மர் விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி அவருக்கு ஜோடியாக நடிக்க மாமன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அவர்களை தாண்டி ராஜ்கிரண், பாலா சரவணன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் அதாவது தாய் மாமனின் பொறுப்புகளை சொலலம் இந்த படம் குடும்ப ரசிகர்களிடம் முதல் நாளே நல்ல ரீச் பெற்றுள்ளது.
படம் ரிலீஸ் ஆன நிலையில் இப்படம் ஜெயிக்க ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவாகாரம் குறித்து சூரி தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.
தற்போது முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ. 2.9 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள மாமன் வரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.