டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள்

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில், பொலிஸ் காவலில் ஏற்பட்ட 49 மரணங்களும், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 30 மரணங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டதாக, ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்தார்.
இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.