இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
ரஷ்யாவில் புதிய வைரஸ்!

ரஷ்யாவில் பரவி வரும் மர்மமான வைரஸ் காரணமாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் தொற்றுக்கு பிறகு மக்களிடையே பல புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ரஷ்ய மக்களை இனம்கண்டுகொள்ளாத குறித்த வைரஸ் தாக்கி வருகிறது.
இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் இரத்தம் கலந்த இருமல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் அதிக காச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.