நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்
சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உக்ரைன் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இருப்பினும், போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா இன்னும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

