டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் பொது வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.