டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் விமானத்தில் இருந்ததாக தகவல்

இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8) புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானத்தின் வால்பகுதி BJ Medical College’s UG விடுதியில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் அடங்கலாக 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள் 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர் 1 கனேடிய நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பயணித்தவர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

