இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
வசூலை வாரிக்குவிக்கும் டிராகன் திரைப்படம். இதுவரை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி box officeல் இணைந்து சாதனை படைத்துள்ளது.
ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இதன்மூலம் இதுவரை எந்த ஒரு அறிமுக ஹீரோவும் செய்யாத சாதனையை பிரதீப் செய்துள்ளார்.
11 நாட்களை வெற்றிகரமாக டிராகன் படம் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அப்போ ஒரு நாளைக்கு 10கோடி அள்ளுகின்றது டிராகன்