Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
வடக்கிலும் கால்பதிக்கும் நோலிமிட் (NOLIMIT), தனது 28வது காட்சியறையை யாழ்ப்பாணத்தில் வெகுவிமரிசையாகத் திறந்து வைக்கின்றது
கொழும்பு, இலங்கை – இலங்கையில் நவநாகரிக ஆடையணி விற்பனையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நாமமான நோலிமிட், தனது 28வது காட்சியறையை யாழ் நகரின் மையத்தில் வெகுவிமரிசையாக திறந்து வைக்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. தனித்துவமான பண்புகளைக் கொண்ட கலாச்சாரத்துடன், வடக்கின் தனித்துவமான அடையாளமாகவும், ஆழமாக வேரூன்றியுள்ள மரபுகளையும் கொண்டுள்ள சிறப்பு மிக்க ஒரு நகரமாகத் திகழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தில் இந்நிறுவனம் தற்போது காலடியெடுத்து வைத்துள்ளது. தனித்துவமான சந்தை வாய்ப்புக்கள், பாரம்பரியச் சிறப்பு மிக்க உணவு வகை, கலை மற்றும் கலாச்சார விழுமியங்கள், கைவினை உற்பத்திப் பொருட்கள், மற்றும் ஓயாத உழைப்பின் உத்வேகம் என இலங்கையில் கலாச்சார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. இந்த தனித்துவமான பண்புகள் அனைத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கச் செய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் நோலிமிட்டின் புத்தம்புதிய காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் நவீன அபிலாஷைகளை பிரதிபலிக்கும் அதேசமயம், முழுக் குடும்பத்திற்கும் ஏற்ற சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்குகின்றது.
இலங்கை மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற கொள்வனவு அனுபவத்தை வழங்கி, நாட்டிலும், நாட்டிற்கும் வெளியிலும் தன்னை தொடர்ந்தும் விஸ்தரித்து வரும் இந்நாமத்தின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு மேலும் வலுப்படுத்தியுள்ளது.
யாழ் நகரின் பிரதான வர்த்தக மையத்தில் இந்த காட்சியறை அமைந்துள்ளதுடன், ஆண்களுக்கான ஆடையணிகள், பெண்களுக்கான ஆடையணிகள், மற்றும் சிறுவர்களுக்கான ஆடையணிகள் என பலதரப்பட்ட ஆடையணிகள், பாதணிகள் மற்றும் அணிகலன்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பிரயாண பாவனைப் பொருட்கள் மற்றும் பிரயாணப் பொதிகள், மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பரந்த வகை தெரிவுகளை வழங்கி, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்யும் மகத்தான அனுபவத்தை ஏற்படுத்துகின்றது. தாராளமான வாகனத் தரிப்பிட வசதி மற்றும் எளிதாக அணுகக்கூடிய இடம் ஆகியவற்றுடன் நான்கு மாடிகளைக் கொண்டுள்ள யாழ் காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான, சிக்கனமான, மற்றும் குடும்பத்திற்கு உகந்த கொள்வனவுச் சூழலைக் கொண்டுள்ளது. உலகளாவிய நவநாகரிகப் போக்குகளுக்கு ஏற்ப, உள்ளூர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட தயாரிப்புக்களை வாடிக்கையாளர்கள் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.
1992ம் ஆண்டில் இயங்க ஆரம்பித்த நோலிமிட் நிறுவனம், இலங்கையில் மிகப் பாரிய நவநாகரிக வர்த்தகச்சங்கிலியாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், நாடெங்கிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. நான்கு காட்சியறைகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் திறந்து வெளிநாடுகளுக்கும் தன்னை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமையளித்து, திறன் மிக்க சேவையை வழங்குவதில் பெயர்பெற்று விளங்கும் நோலிமிட், சேவையின் மகத்துவம் மற்றும் நவநாகரிக போக்குகள் ஆகியவற்றுக்கு புதிய தரஒப்பீட்டு நியமங்களை தொடர்ச்சியாக நிலைநாட்டியவாறு, இலங்கையின் நவநாகரிக வர்த்தகத்துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.
நோலிமிட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஹபீஸ் முபாரக் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “கலாச்சாரம், தொழில் முயற்சி, மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் என வளம் நிறைந்த யாழ்ப்பாணம், இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் மிக முக்கியமான வளர்ச்சி கொண்ட மையமாக இந்த நகரத்தை நாம் கருதுகின்றோம். இந்நகரத்தில் வளர்ச்சி கண்டு வருகின்ற அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில், நவீன, உலகத்தரம் வாய்ந்த வர்த்தக அனுபவத்தை வழங்கி, எமது 28வது காட்சியறையின் மூலமாக யாழ்ப்பாணத்தின் எதிர்கால நலன் மீது முதலீடு செய்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இப்பிராந்தியத்திலுள்ள குடும்பங்களுக்கு தரமான, நவீன நவநாகரிக தயாரிப்புக்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றோம்.”
நோலிமிட் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் திரு. றனீஸ் ஷெரீப் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: “எதிர்வரும் ஆண்டுகளில் வலுவான வர்த்தக மையமாகவும், வெகுவிரைவாக மாற்றம் கண்டு வருகின்ற நுகர்வோர் செயற்பாடுகள் நிறைந்த நகரமாகவும் மாறுவதற்கான சிறப்பான ஒரு ஸ்தானத்தில் யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. மூலோபாயரீதியாக, வளர்ச்சிவாய்ப்புக்கள் நிறைந்த சந்தைகளை எட்டும் வகையில் எமது சேவைகளை விஸ்தரிப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளதுடன், இலங்கையில் அனைத்து பிராந்தியங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி, நாட்டில் மிகவும் அபிமானம் பெற்ற நவநாகரிக வர்த்தகச் சங்கிலியாக நோலிமிட் திகழ்வதை உறுதிப்படுத்துவதற்காகவும், எமது நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களின் முக்கியமான பகுதியாக எப்போதும் யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், நாடெங்கிலும் சமூகங்களை எட்டும் ஒரு உண்மையான தேசிய நாமமாக மாற வேண்டும் என்ற எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இப்புதிய காட்சியறை திறந்து வைக்கப்படுகின்றது. இந்நகரத்தின் உத்வேகம் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில், சிக்கனமான, உயர் தரம் கொண்ட கொள்வனவு அனுபவத்தை நாம் வழங்குவோம்.”
வசீகரமான ஒரு சூழலில், அதிநவீன நவநாகரிக தெரிவுகளை ஆராய்ந்து, அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில், சர்வதேச போக்குகளுடன், அதிநவீன பாணியிலான சூழல் கொண்டதாக இக்காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சௌகரியம் ஆகியவற்றுக்கு எப்போதும் முதலிடமளிக்கும் நோலிமிட், இலங்கையின் வர்த்தகத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்தும் முன்னின்று உழைத்து வருகின்றது.
தனது விரிவாக்க நடவடிக்கை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் புதிய காட்சியறைகளைத் திறந்து வைப்பதற்கான திட்டங்களை நோலிமிட் முன்னெடுத்து வருவதுடன், நவநாகரிகத் துறையில் சந்தை முன்னோடி என்ற தனது ஸ்தானத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த நவநாகரிகத்தை நாட்டில் அனைத்து பிராந்தியங்களுக்கும் கிடைக்கச் செய்வதில் நோலிமிட் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக யாழ்ப்பாணத்தில் இக்காட்சியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Hey! Recently gave cashhoardslot a spin. It seems like a niche slot game, definitely seems designed for a certain type of player. I want to try some more slots later cashhoardslot.