டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
வனப்பகுதில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்

ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து சிறுவன் ஒருவனைபோலிஸார் மீட்டுள்ளனர்
நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன், பூந்தல தேசிய வனத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சிறுவனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இந்தக் சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும், வனப்பகுதிக்குள் சிறுவன் எவ்வாறு சென்றார் என்பது குறித்த தகவலும் இதுவரை அறியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.