வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் – அமைச்சர் சந்திரசேகர்

santhirasekar

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் நாம் முறைமையொன்றை பின்பற்றி வருகின்றோம். அவர்களது படகுகள் தொடர்பிலும் நாம் முறைமையொன்றை பின்பற்றுகின்றோம். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது. வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் இந்திய மீனவரின் படகுகளை கைப்பற்றுகின்றோம். அது தொடர்பில் நாம் பின்பற்றும் முறைமை ஒன்று உள்ளது. அதேபோன்று சிசெல்ஸ் நாட்டில் அண்மையில் அது தொடர்பில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கிணங்க அந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் படகுகள் உடனடியாகவே கடலில் மூழ்கடிக்கப்படும். அந்த படகுகளில் எரிபொருள் இருப்பதால் சூழலுக்கு ஏற்படும் மாசை தவிர்ப்பதற்காக  படகை எரித்து அவ்வாறு கடலில் மூழ்கடிக்கும் திட்டம் அங்கு காணப்படுகிறது. 

One thought on “வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் – அமைச்சர் சந்திரசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *