Categories: Local

ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்.

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7 News Pulse

Recent Posts

SLFPA MEMBERS’ PREMIER LEAGUE 2024/25

Food Processors to battle at 9th annual six -a -side softball. Cricket Encounter on 15th…

2 hours ago

Curtin University Colombo’s Computing Degrees bridges academia and industry for work-ready graduates

Curtin University Colombo's computing degrees feature a noteworthy synergy between academic excellence and industry requirements,…

3 hours ago

The Impossible Shot – A Spectacular Evening of Wildlife Photography & Storytelling

Cinnamon Nature Trails and Cinnamon Life present The Impossible Shot, an extraordinary evening where art,…

3 hours ago

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மொஹமட் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும்…

4 hours ago

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச்…

4 hours ago

பெண் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில்…

4 hours ago