இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஹமாஸை அறிக்கை மூலம் எச்சரித்த டிரம்ப்

காசா பகுதியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் அவர், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
காசா பகுதி மக்கள் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஹமாஸை அங்கிருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.