டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
ஹொண்டா கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி – MCA G பிரிவு 25 ஓவர் லீக்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் (MCA) நடப்பு கிரிக்கெட் பருவகாலத்தில் விளையாடப்படும் கடைசி பாய் விரிப்பு (Matting wicket) ஆடுகள கிரிக்கெட் சுற்றுப் போட்டியான MCA G பிரிவு 25 ஓவர் லீக் சுற்றுப்போட்டி 2025 தற்போது நடைபெற்று வருகிறது.
ஹொண்டா கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு 14ஆவது தொடர்ச்சியான வருடமாக ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி (பிறைவேட்) நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் MCA – ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவமானது 3ஆவது நீண்டகால அனுசரணையைக் கொண்ட போட்டியாகும்.
அத்துடன் அதிகளவிலான அணிகள் பங்குபற்றும் போட்டியாகவும் இது அமைகின்றது.
இந்த வருடப் போட்டியில் லங்கா ஷிப்பிங் அண்ட் லொஜிஸ்டிக்ஸ் பிறைவேட் லிமிட்டெட், டி செம்சன் அண்ட் சன்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், புளூ சிப் டெக்னிக்கல் சேர்விசஸ், TVS லங்கா (பிறைவேட்) லிமிட்டெட், CBC பினான்ஸ் லிமிட்டெட், IFS R&D இன்டர்நெஷனல் மற்றும் WSO2 லங்கா பிறைவேட் லிமிட்டெட் ஆகிய 7 அறிமுக அணிகள் உட்பட 50 அணிகள் பங்குபற்றுகின்றன.




போட்டி நடைபெறும் முறை
50 அணிகள் எட்டு குழுக்களில் இரண்டு கட்டப் போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றுப் போட்டியில் 148 அரை நாள் (half day) போட்டிகள் நடைபெறும். அவற்றில் லீக் சுற்றில் 133 போட்டிகளும் நொக் அவுட் சுற்றில் 15 போட்டிகளும் அடங்குகின்றன.
தற்போது நடைபெற்றுவரும் லீக் சுற்று 2025 மே 29ஆம் திகதி நிறைவடையும். முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் மே 31ஆம் திகதியும் கால் இறுதிப் போட்டிகள் ஜூன் 1ஆம் திகதியும் அரை இறுதிப் போட்டிகள் ஜூன் 7, 8ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி MCA மைதானத்தில் ஜூன் 14ஆம் திகதியும் நடைபெறும்.
அணிகள் இடம்பெறும் குழுக்கள்
A குழு: (7 அணிகள்) 99X, கொன்ட்ரினெக்ஸ் சிலோன், லங்கா ஷிப்பிங் அண்ட் லொஜிஸ்டிக்ஸ் பிறைவேட் லிமிட்டெட், சைனேர்ஜன் ஹெல்த், JFஅண்ட் I பெக்கேஜிங், மெலிபன் பிஸ்கட் ‘பி’, சிலைன் ஹோல்டிங்ஸ்.
B குழு: (6 அணிகள்) மெக்லெரன்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்டார் கார்மண்ட்ஸ், ஹில்டன் கலம்போ ரெசிடென்சீஸ், இன்கியூப் க்ளோபல், வோக் டெக்ஸ், டி செம்சன் அண்ட் சன்ஸ்.
C குழு: (6 அணிகள்) டெக்னோமெடிக்ஸ், புளூ சிப் டெக்னிக்கல், HSBC ‘சி’, ஜெட்விங் ட்ரவல்ஸ், மொபிடெல், பிரமிட் வில்மார்.
D குழு: (7 அணிகள்) சிங்கர் ‘பி’, எக்ஸ்போ லங்கா ப்றைட், யுனைட்டட் ட்ரக்டர், அமானா வங்கி, சிஸ்கோ லெப்ஸ், TVS லங்கா, அலியான்ஸ் இன்சூரன்ஸ்.
E குழு: (6 அணிகள்) ஏய்ட்கன் ஸ்பென்ஸ், CBC பினான்ஸ், மாஸ் அக்டிவ் ‘பி’, அக்விட்டி நொலேஜ், HNB அசுவரன்ஸ், சவுத் ஏசியன் டெக்னோலொஜீஸ்.
F குழு: (7 அணிகள்) ரிவோகெயார் சொலூஷன்ஸ், ரெக்னிஸ் அப்லியன்சஸ், வோட்டர்ஸ் எஜ், ப்ரெண்டிக்ஸ் எசென்ஷல்ஸ், CIC ஹோல்டிங்ஸ், சிட்டிசன்ஸ் டெவலப்மன்ட் பிஸ்னஸ் ‘பி’, சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்.
G குழு: (5 அணிகள்) IFS R 7 D இன்டர்நெஷனல், வைலி குளோபல், மெட்ரோபொலிட்டான் குறூப், ஏ பவர் அண்ட் கோ., லண்டன் ஸ்டொக் எக்ஸ்சேஞ் குறூப்.
H குழு: (6 அணிகள்) அக்செஸ் குறூப் , AIA இன்சூரன்ஸ், WSO2 லங்கா பிறைவேட் லிமிட்டெட், IPD கலம்போ, ஸ்ரீலங்கா டெலிகொம், கொக்கா-கோலா பெவரேஜஸ்.
வீரர் கட்டுப்பாட்டு குழு (Player Control Team)
அனைத்து போட்டிகளும் MCA இனால் நியமிக்கப்பட்ட போட்டி நடுவரால் மேற்பார்வை செய்யப்படும். இலங்கை மத்தியஸ்தர்கள் சங்கத்தால் (ACUSL) கள மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள். இலங்கை எண்ணிக்கை பதிவாளர்கள் சங்கத்தால் எண்ணிக்கை மற்றும் DLS முறைமை பதிவாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
போட்டிக்கான பந்து
இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளும் MCA இலச்சினை பதிக்கப்பட்ட பாகிஸ்தான் Grays லீக் பந்தைக் கொண்டு விளையாடப்படும். இந்தப் பந்துகள் அணிகளுக்கு குறிப்பிட்ட விலையில் வழங்கப்படும்.
விசேட விருதுகள்
சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன், இறுதி ஆட்ட நாயகன் ஆகிய விசேட விருதுகள் வழங்கப்படும்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமேஸன் ட்ரேடிங் (இங்லிஷ் ரீ ஷொப்) அணியை 39 ஓட்டங்களால் வெற்றிகொண்டு யூனிலிவர் ஸ்ரீலங்கா சம்பியனானது.
இப் போட்டி தொடர்பான ஊடக மாநாநாடும் உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கும் நிகழ்வும் 2025 மே 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு MCA லெஜண்ட்ஸ் விங் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி ப்றைவேட் லிமிட்டெடின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் வலு உற்பத்திகள் பொது முகாமையாளர் கப்பில குணதிலக்க, நிருவாக பொது முகாமையாளர் தமித்த ஜயசுந்தர, குறியீடுகள் சந்தைப்படுத்தல் அதிகாரி கவிந்த கயங்க ஆகியோரும், வர்த்தக கிரிக்கெட் சங்கம் சார்பாக அதன் உதவித் தலைவர் மற்றும் கிரிக்கெட் அபிவிருத்திக் குழுத் தலைவர் சிரோஷ குணதிலக்க, பொதுச் செயலாளர் ரொஹான் சோமவன்ச, உதவிப் பொருளாளர் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஹசித்த தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வர்த்தக கிரக்கெட் சங்கம்
டிரோன் பெரேரா
21-05-2025