18 வருட காத்திருப்பு – IPL வரலாற்றில் புதிய வெற்றியாளர்.

நடந்து முடிந்த 18வது IPL தொடரை ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி கைப்பற்றியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது.

18வது IPLஇன் இறுதிப்போட்டி எல்லையில் போராடும் இராணுவத்தினருக்கான சமர்ப்பன பாடல்கள், மரியாதைகளோடு ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்குளூர் அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட் இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெங்குளூரு அணிக்காக விராட் கோலி 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

191 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் 184 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதற்கமைய பெங்களூர் அணி தமது முதலாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ருணால் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.

IPL வரலாற்றில் புதிய வெற்றியாளராக இணைந்த RCB அணியின் முன்னாள் தூண்களான கிறிஸ் கெயில் மற்றும் AB DE வில்லியர்ஸ் விராட் கோலி மற்றும் குழுவினரோடு வெற்றியை பகிர்ந்துகொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ்ஐ இறுதிப்போட்டிக்கு அழைத்துவந்த ஸ்ரேயாஸ் ஐயர் IPLன் நம்பிக்கை நட்சத்திரமாகவே மாறியுள்ளார்.கரணம் இது அவர் இறுதிப்போட்டிக்கு அழைத்துவந்த 3வது டீம் ஆகும்.

இந்த இறுதிப்போட்டியை காண்பதற்காக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனோக் வருகைதந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *