200 வருட வரலாற்றைக்கொண்ட மாத்தளை முத்துமாரி அம்மனுக்கு மாசி மக மஹோற்சவம் ஆரம்பம்.

கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே மிடுக்காய் 108 அடி உயரமான இராஜகோபுரத்தோடு அமைந்துள்ளது மாத்தளை முத்துமாரி அம்மா. 200 வருட வரலாறு காணப்படும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மத மஹோற்சவம் இன்று (வெப்ரவரி 18) கொடியேற்றதோடு ஆரம்பமானது.

அடுத்து 21நாட்கள் மஹோற்சவ காலை மாலை பூஜைகளோடு இனிதே நடைபெற திருவுளம் கொண்டுள்ளது.

இவ்வாலயத்துக்கான பஞ்சரத பவனி மார்ச்மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது.இதன்போது முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர் ஆகியோர் இரத பவனி வருவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *