Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its remarkable sporting legacy with a standout performance at the 40th Annual Mercantile Athletics Championships 2025, bringing home the prestigious Overall Runners-Up title for the eighth year running. Competing over three action-packed days on 14th, 15th and 16th November 2025 at…
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் உரிமையாளர்களால் நடத்தப்படும் Caltex அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் பிரத்தியேக சேவை நிலையங்களை Chevron கொண்டாடுகிறது
நகரம், மாநிலம்., மாதம் DD, வருடம் —சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கையில் Caltex பிராண்ட் உயர்தர சாசன பொருட்கள் வழங்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் Chevron Lubricants Lanka PLC, தனது முதன்மை பாலின சமத்துவ முன்முயற்சியான Caltex Abhimani மூலம் வாகனத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது.
பணியிட ஒப்புமை மற்றும் அதிகாரமளிக்கும் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக, இலங்கை முழுவதும் உள்ள பெண் உரிமையாளர்களால் நடத்தப்படும் Caltex அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் மற்றும் Caltex Xpress Lube சேவை நிலையங்களுக்காக Chevron ஒரு பிரத்யேக அறிவுப் பகிர்வு அமர்வை நடத்தியது இந்த அமர்வு பங்கேற்பாளர்களுக்கு வாகன இயக்கவியல் பற்றிய நல்ல புரிதலை வழங்கியது —இது அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, பாரம்பரியமாக ஆண்கள் மேலோங்கிய துறையில் வாடிக்கையாளர்களுடன் தன்னம்பிக்கையுடன் ஈடுபட உதவியது.
தமது பிரத்தியேக விற்பனையாளர் வலையமைப்பில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த முன்னோடியான விடயத்தில் பெண்களின் முக்கிய பங்கை மேலும் அங்கீகரிக்கும் வகையில், Chevron ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் முன்னணி காப்பீட்டு சேவை வழங்குநரிடமிருந்து ஒரு வருட விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் பரிசாக வழங்கியது. இந்த காப்பீட்டு திட்டத்தில் ஆயுள் காப்பீடு, மருத்துவமனைப் பலன் மற்றும் புறநோயாளர் துறை (OPD) உரிமைகள் ஆகியவை அடங்கும்.
இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்த Chevron Lubricants Lanka PLC இன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்ட்ரம் பால் கூறுகையில், ” பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய துறையில் செயலாற்றி தடைகளை உடைத்தெறியும் எங்கள் பிரத்தியேக விற்பனையாளர்கள் வலையமைப்பின் முன்னோடிப் பெண்களைப் பாராட்டுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அறிவு, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், அவர்களின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுகிறோம், மேலும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான தொழில்துறையை உருவாக்குவதற்கான முனைப்புகளை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம். ” என்றார்.
Chevron Lubricants Lanka PLC இன் மனிதவளத் தலைவர் மஹேஷ்னி ஹமங்கோடா மேலும் கூறுகையில், “Chevron இல், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பது முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். Caltex Abhimani மூலம், பெண் தொழில்முனைவோர் செழித்தோங்கவும், தலைமை தாங்கவும், அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்கவும் கூடிய ஒரு சூழலை உருவாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
Chevron Lubricants Lanka PLC, தனது Caltex பிராண்ட் மூலம், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிலையங்களைக் கொண்டு நாட்டின் மிக விரிவான சில்லறை விற்பனை வலையமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. வணிகங்களில் மட்டுமல்லாமல், சமூகத்தின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், நிறுவனம் தனது பங்குதாரர்களுடன் நிலையான, அர்த்தமுள்ள ஈடுபாடு மூலம் பல்வகைபட்ட தன்மை யையும், ஒப்புமையையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
Chevron பற்றி
Chevron உலகின் முன்னணி ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாகும். மலிவான, நம்பகமான மற்றும் எப்போதும் சுத்தமான எரிசக்தி மனித முன்னேற்றத்திற்கு அத்தியாவசியம் என நாங்கள் நம்புகிறோம். Chevron கச்சா எண்ணெய் (crude oil) மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்கிறது; போக்குவரத்து எரிபொருட்கள், சாசனப் பொருட்கள், பெட்ரோவேதியியல் மற்றும் சேர்க்கை பொருட்கள் (additives) ஆகியவற்றை தயாரிக்கிறது. மேலும், தொழில்துறையின் முன்னேற்றத்திற்கும், எங்கள் தொழில்திறனுக்கும் உதவும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது. எங்கள் நோக்கம், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை மேலும் வளர்ப்பதோடு, தொழிற்சாலைகளில் கார்பன் வெளியீட்டை குறைத்து, பசுமை எரிபொருட்கள், கார்பன் பிடிப்பு மற்றும் சமநிலைப்படுத்தல், ஹைட்ரஜன் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்கள் போன்ற குறைந்த கார்பன் தொழில்களை முன்னேற்றுவதாகும்.Chevron பற்றி மேலும் தெரிந்துகொள்ள: www.chevron.com



