2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை, இலங்கையில்: இந்திய தேசிய கட்டண வலையமைப்பின் (NPCI) சர்வதேச பிரிவான NIPL இன்டர்நேஷனல் (NIPL) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் UPI கட்டண முறையை விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய பயணிகள் இலங்கையில் எளிதாக பணம் செலுத்த வசதியேற்படுத்துவதோடு, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகும். இந்தியாவின்…
2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்கிறது HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, 2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது. மார்ச் 6ஆம் திகதி HNB டவர்ஸில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர், வர்த்தகர்கள், கூட்டாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அதன்போது HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்: “தேசியத் தேவைகளை அடையாளம் காணும் வங்கி என்ற வகையில், தேசியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நிதி அணுகலுடன் கூடுதலாக, அறிவு, வாய்ப்புகள், மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றையும் பெண்களுக்கு வழங்குகிறோம். சர்வதேச மகளிர் தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், எங்களின் நிறுவன மூலோபாயக் கொள்கையாகவே பெண்களுக்கு மதிப்பு கூட்டுகிறோம். அதன் மூலம், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின கருப்பொருளான ‘Give to Gain’ என்பதைப் பொருளுள்ளதாக மாற்ற முடிந்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பெண்கள் சமூகம் இருக்கும் நாட்டில் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். அத்துடன், பெண் தொழில்முனைவோருக்கு பலமாக இருப்பதன் மூலம், இலங்கையில் உருவாகிவரும் வர்த்தகங்கள் ஊடாக புத்தாக்கம் மற்றும் தேசிய மீள்சக்தியை வலுப்படுத்த முடியும்.” என தெரிவித்தார்.
தேசிய வர்த்தக மேம்பாட்டு அதிகாரசபை (NEDA), தொழில் அபிவிருத்தி சபை (IDB), சிறு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு (SED), மகளிர் அலுவலகம், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (JICA), களனி பல்கலைக்கழகம், இலங்கை மகளிர் தொழில் முனைவோர் சபை, ஆசிரி வைத்தியசாலை, HNB இன்ஷூரன்ஸ் மற்றும் B2.lk நிறுவனம் ஆகியனவும், இலங்கையில் பெண்களின் தொழில் முனைவுத்துவத்தை ஊக்குவிப்பதில் பங்களிக்கும் பல தொழில் வல்லுநர்கள் மற்றும் கூட்டாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“பெண்கள் கல்வி மற்றும் எழுத்தறிவில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருந்தாலும், தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்க அளவில் இல்லை. HNB நாங்கள், பெண் தொழில்முனைவுத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுவதுடன், பெண்களின் திறன்கள் மற்றும் திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு களத்தையும் உருவாக்குகிறோம். HNB பெண்கள் வங்கிச் சேவை முன்மொழிவின் மூலம் பெண்களின் தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க உதவும் அறிவு, நிதி அணுகல் மற்றும் வழிகாட்டுதலை நாங்கள் வழங்குகிறோம்” என HNB மூத்த துணைத் தலைவர் மற்றும் பிரதான நிலைத்தன்மை அதிகாரி பிரியங்க விஜயரத்ன அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, தொழில்முனைவோருக்கு இலக்கு சார் நிதி தீர்வுகள், வழிகாட்டும் ஆதரவு, டிஜிட்டல் கருவிகள் மற்றும் சந்தை அணுகல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சியானது, பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய உந்து சக்திகளாக டிஜிட்டல் தொழில்முனைவுத்துவத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
இதன்போது, ஆசிரி வைத்தியசாலையுடன் இணைந்து சுகாதார நிபுணர்களால் நடத்தப்பட்ட மருத்துவ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், சுகாதார காப்பீட்டு பாதுகாப்பை வழங்கி பெண் தொழில்முனைவுத்துவத்தை நீண்டகாலம் வலுப்படுத்த HNB செயற்பட்டது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் வாழ்க்கை சமநிலை மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக அன்று நடைபெற்ற மனோ ஆலோசனை நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பெண் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளைத் திறந்துவிடும் வங்கிச் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் மூலம், HNB தனது தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கத்தின் பெருமைமிகு மரபை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath.
NativeGut is a precision-crafted nutritional blend designed to nurture your dog’s digestive tract.
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization
PurDentix is a revolutionary oral health supplement designed to support strong teeth and healthy gums. It tackles a wide range of dental concerns
Gluco6 is a natural, plant-based supplement designed to help maintain healthy blood sugar levels.
Arialief is a carefully developed dietary supplement designed to naturally support individuals dealing with sciatic nerve discomfort while promoting overall nerve wellness.
Maintaining prostate health is crucial for men’s overall wellness, especially as they grow older. Conditions like reduced urine flow, interrupted sleep
InsuLeaf is a high-quality, naturally formulated supplement created to help maintain balanced blood glucose, support metabolic health, and boost overall vitality.
Manergy is an advanced male vitality supplement created to help support healthy testosterone levels