Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
மீண்டும் Playdium திரும்பும் PPL 2026 – மக்கள், அணிகள், உற்சாகத்தை ஒன்றிணைக்கிறது
இலங்கை, கொழும்பு – PPL 2026 மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதனுடன் Playdium நாட்காட்டியின் ஒரு அங்கமாகிவிட்ட அதே பரிச்சயமான உற்சாகமும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ஒரு லீக் போட்டித் தொடர் என்பதற்கு அப்பால், PPL என்பது ஒவ்வொரு வருடமும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இது பணியில் மூழ்கியுள்ள சக ஊழியர்கள் தங்களது பணிச் சூழலில் இருந்து வெளியே வந்து, அணி உறுப்பினர்களாக, போட்டியாளர்களாக, நண்பர்களாக ஒன்றிணைவதற்கான ஒரு களத்தை ஏற்படுத்துகின்றது.
கொழும்பு One Galle Face வளாகத்தில் அமைந்துள்ள Playdium அரங்கில் நடைபெறும் PPL தொடரானது, ‘விளையாட்டின் மூலம் மக்களை ஒன்றிணைத்தல்’ எனும் அதன் எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணக்கருவை தொடர்ச்சியாக பேணி வருகிறது. இந்த லீக்கின் மையமாக Bowling விளையாட்டு அமைந்த போதிலும், PPL தொடரை உண்மையாக வெளிப்படுத்துவது அது உருவாக்கும் சூழலாகும். விளையாட்டிற்கு இடையே வெளிப்படும் சிரிப்பொலி, நட்பு ரீதியான போட்டி, ஒரு ‘Strike’ ஏற்பட்டதும் பகிரப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் நூலிழையில் அது தவறும் போதான தருணங்கள் என அனைத்து விடயங்களும் இணைந்து ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, ஆழமான சமூகத் தொடர்பு கொண்ட அனுபவத்தைத் தருகின்றது.
PPL 2026 ஆனது நிறுவன அணிகள் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் வலுவான ஒன்றிணைவை மீண்டும் வரவேற்கவுள்ளது. முதன்முறையாக விளையாடுபவர்கள் முதல் வழக்கமான போட்டியாளர்கள் வரை அனைவரும் இதில் பங்குபெறுவதை உறுதி செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2026 மே 16 மற்றும் 23 ஆகிய திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்த லீக் நாட்கள், பொழுதுபோக்கு மற்றும் ஒன்றுகூடல் நாட்காட்டியில் முக்கிய தருணங்களாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Playdium அரங்கை பொறுத்தவரை, PPL என்பது நாம் நடத்தும் ஒரு நிகழ்வு மாத்திரமல்ல, வீரர்களுடன் இணைந்து நாமும் அனுபவிக்கும் ஒரு அனுபவமாகும். லீக் போட்டியின் போது இந்த வளாகமானது ஒரு மாறுபட்ட உற்சாகத்துடன் உயிர் பெறுகிறது. விளையாடும் தளம், ஆர்கேட் (Arcade) விளையாட்டுகள், ஆரவாரம், நட்பு ரீதியான கிண்டல்கள் என அனைத்தும் கலந்து PPL இற்கே உரிய தனித்துவமான சூழலை உருவாக்குகின்றது. இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒரு பிணைப்புமாகும்.
PPL 2026 இன் பிரதான அனுசரணையாளராக (Title Sponsor) சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் திகழ்கின்றது என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த லீக்கின் வளர்ந்து வரும் மட்டத்தையும் மதிப்பையும் இது பிரதிபலிக்கிறது. அதனுடன் இணைந்ததாக, டிஜிட்டல் பங்காளராக Atom, உத்தியோகபூர்வ பரிசுப் பங்காளராக Pearlbay, மூலோபாயப் பங்காளராக One Galle Face Mall, மக்கள் தொடர்புப் பங்காளராக PR Wire, உத்தியோகபூர்வ வர்த்தக தளப் பங்காளராக PickMe, சக்தி வழங்கும் பங்காளராக Kobra Energy drink, உத்தியோகபூர்வ திறமையாளர் பங்காளராக Oceans Talent, டிஜிட்டல் உள்ளடக்கங்களின் பங்காளராக Hype Labs ஆகியோருடன் இணைந்து இந்தப் பயணத்தில் பல்வேறுபட்ட அனுசரணையாளர்களை நாம் வரவேற்கிறோம்.
அணிகள் ஒவ்வொன்றும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை PPL எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் இங்கு காணக் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். பொதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அலுவலகச் சூழலில் சந்திக்கும் நபர்கள், முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கி உற்சாகமாக இருப்பதை இங்கு காண முடியும். எவ்வித கட்டாயப்படுத்தலும் இன்றி மிகவும் இயல்பான முறையில் குழு உணர்வை இது ஏற்படுத்துகிறது.
Playdium வளாகமானது ஒரு தளமாக பரிணமிப்பதைக் காண்கிறோம். ஒன் கோல்பேஸ் வளாகத்தின் பிரதான மின்சார படிக்கட்டிற்கு (Escalator) அருகிலுள்ள புதிய நுழைவாயில் ஊடாக வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடும்படியான அதிகரிப்பை இதன்போது எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகமான மக்கள் உள்ளே வந்து, இந்த இடத்தின் அனுபவத்தை கண்டறிந்து Playdium அனுபவத்தின் ஒரு அங்கமாக மாறுவதோடு, அதன் வளர்ச்சியில் PPL நிகழ்வும் ஒரு முக்கிய அங்கமாக மாறவுள்ளது.
PPL 2026 நிகழ்வானது நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்கள் விரும்பி பங்கேற்கும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதிலேயே எமது கவனம் உள்ளது. இது ஒரு போட்டி மாத்திரமல்ல, அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் ஒரு இனிமையான தருணமாக அமைய வேண்டும் என்பதே எமது நோக்கம்.
இந்த மே மாதத்தில் அனைவரையும் மீண்டும் விளையாட்டு தளத்திற்குள் வரவேற்க நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Playdium பற்றி
கொழும்பு One Galle Face இல் அமைந்துள்ள Playdium ஆனது, இலங்கையின் மிகப்பெரிய உள்ளக பொழுதுபோக்கு அரங்காகும். இது Bowling, arcade gaming, karaoke, VR அனுபவங்கள், உணவு விடுதிகள், சிறுவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுப் பகுதி என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுள்ளது. மக்கள் ஒன்றிணைந்து ஓய்வை அனுபவிக்கவும், போட்டியிடவும், தருணங்களைப் பகிர்ந்து அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த இடமாகும்.
Feeling lucky indeed! The bonuses they offer are way better than other sites I have tried. It really makes the gaming experience more exciting.
Absolutely loving the bonuses they offer for new players in Nigeria. The registration is quick and the games load fast even on a mobile data connection. 7bitcasinologin
I’ve been looking for a reliable spot to play and this one really delivers. The interface is smooth and the payouts are fast. Highly recommend checking out jj777betlogin for a great experience.