Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
தேசிய போஷணையை வலுப்படுத்துவதற்காக பெல்வத்த நிறுவனம் கிரீன்பீல்ட் திரவப்பால் உற்பத்தி நிலையத்திற்கு ரூ. 1.86 பில்லியன் முதலீடு
பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் (Pelwatte Dairy Industries Limited) நிறுவனம், குருணாகலில் உள்ள தனது தொழிற்சாலையில் கிரீன்பீல்ட் திரவப்பால் உற்பத்தி நிலையத்தின் (Greenfield Liquid Milk Manufacturing Facility) முதற்கட்டத்தை நிறுவுவதற்காக, தனக்கு முழுமையாக சொந்தமான Pelwatte Foods (Private) Limited நிறுவனத்தின் ஊடாக பாரிய புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
சுமார் ரூ. 1.86 பில்லியன் பெறுமதியான இந்த முதலீடானது, கொழும்பு உலக வர்த்தக மையத்தில் கடந்த மே 21ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வில் பெல்வத்த டெய்ரி நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க, முதலீட்டுச் சபையின் தலைவர் கலாநிதி சுலக்சன ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரவப்பால் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளுக்கான விரிவாக்கம்
இந்த புதிய உற்பத்தி நிலையமானது திரவப்பால் மற்றும் சொக்லேட், வெனிலா, ஸ்ட்ரோபெரி, ஐஸ் கோபி போன்ற சுவைகளைக் கொண்ட பால் பானங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தவுள்ளது. செயலாக்கலுக்கான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட, முழுமையாக தன்னியக்க மயமாக்கப்பட்ட தொழிற்சாலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய உற்பத்தித் தரத்திற்கு இணங்க நிலையான தரத்தை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் 2026 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வணிக ரீதியிலான செயற்பாடுகள் 2027 ஜூலை மாதத்திற்குள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய போஷணை தொடர்பான சவாலுக்கு தீர்வு
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுவினர் மத்தியில் மந்தபோஷணையானது ஒரு முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகத் தொடரும் ஒரு காலப்பகுதியிலேயே பெல்வத்த நிறுவனத்தின் இந்த முதலீடு அமைந்துள்ளது.
சுகாதாரத் தரவுகளின்படி:
- இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் ஆறில் ஒரு குழந்தை, பிறப்பு எடை குறைந்ததாக பிறக்கிறது; இது நீண்டகால ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி குறித்த சவால்களுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். [unicef.org]
- தேசிய மதிப்பீடுகளின்படி, 15.9% – 18% ஆன குழந்தைகள், பிறக்கும்போதே குறைந்த எடையுடன் காணப்படுகின்றனர். [globalnutr…report.org], [data.worldbank.org]
- வயதுக்கு வந்த பெண்களில் சுமார் 34.6% ஆனோர் குருதிச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மோசமான ஆரோக்கிய விளைவுகளுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. [globalnutr…report.org]
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 17% ஆனோர் குன்றிய வளர்ச்சியுடனும், 15% இற்கும் அதிகமானோர் மெலிந்த உடலமைப்புடனும் காணப்படுகின்றனர்; இது போஷணையில் தொடரும் குறைபாடுகளைக் காட்டுகிறது. [globalnutr…report.org]
கர்ப்பகாலத்தில் தாய்மார்களின் போஷணையை மேம்படுத்துவதும், உயர்தர, புரதம் நிறைந்த உணவு ஆதாரங்களை உறுதி செய்வதும் இந்த அபாயங்களைக் குறைப்பதற்கான அத்தியாவசியமான படிகள் எனள நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
போஷணை மற்றும் உணவுப் பாதுகாப்பில் பெல்வத்தவின் மூலோபாயப் பங்கு
தசாப்த காலமாக, பெல்வத்த நிறுவனம் இலங்கை முழுவதும் முழு ஆடைப் பால்மா தயாரிப்பில் நம்பகமான வீட்டுப் பெயராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தற்போது இந்த பாரம்பரியத்தை திரவப்பால் பிரிவிற்கும் விரிவுபடுத்தி, நுகர்வோருக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் பலதரப்பட்ட போஷணைத் தெரிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய முதலீடு பின்வரும் விடயங்களுக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- உள்ளூர் பால் உற்பத்தித் திறனை வலுப்படுத்துதல்.
- இறக்குமதி செய்யப்படும் பால் உற்பத்திகளில் தங்கியிருக்கும் நிலையைக் குறைத்தல்.
- கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளின் போஷணைத் தேவைகளுக்கு ஆதரவளித்தல்.
- உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர பால் பொருட்கள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
மேம்பட்ட தண்னியக்கமயமாக்கல் காரணமாக நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாக இருந்தபோதிலும், உள்ளூர் மூலப்பொருளான பால் உற்த்தியை அதிகரிப்பது உள்ளிட்ட, பால் விநியோகச் சங்கிலி முழுவதும் மறைமுக மதிப்பை உருவாக்க இத்திட்டம் எதிர்பார்க்கிறது.
தேசிய ஆரோக்கியத்திற்கான எதிர்கால நோக்குடைய முதலீடு
இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்த முயற்சி வெறுமனே வணிக விரிவாக்கம் மட்டுமல்லாது, தேசத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான நீண்டகால முதலீடாகும் என குறிப்பிட்டனர்.
நவீன செயலாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், அதனை பெறுமதி சேர்க்கப்பட்ட பால் உற்பத்திகளாக விரிவுபடுத்துவதன் மூலமும், இலங்கையின் அதிகரித்து வரும் போஷணைச் சவால்களுக்கு, குறிப்பாக ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெல்வத்த நிறுவனம் மேலும் தீவிரமான பங்களிப்பை வழங்க முற்படுகிறது.
எதிர்கால நோக்கு
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த குருணாகல் தொழிற்சாலையானது இலங்கையின் பால் தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக பெல்வத்த நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மந்த போஷணையை எதிர்ப்பதற்கும் ஒட்டுமொத்த போஷணை பெறுபேறுகளை மேம்படுத்துவதற்குமான தேசிய முயற்சிகளுக்கும் இது ஆதரவாக அமையும்.
Best place for those who love high stakes and big wins. The graphics are amazing and the vibe is just right. Go visit buaya777 now.