Executive Committee representation strengthens the company’s role in advancing bilateral business collaboration SLT-MOBITEL has reaffirmed its commitment to strengthening Sri Lanka–US business relations, joining the Sri Lanka–USA Business Council (SLUSABC) of the Ceylon Chamber of Commerce in celebrating a decade of advancing bilateral business engagement. The Council marked its 10th anniversary at its Annual General…
சர்வதேச விருந்தோம்பல் வளர்ச்சியில் மைல்கல்லை கொண்டாடும் விதமாக Granbell Hotels & Resorts இன் 20ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடும் Belluna
டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம், ‘Belluna Lanka ஊடாக தெற்காசியாவில் தனது விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட் இருப்பைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருகிறது. இப்பிராந்தியத்தில் குழுமத்தின் அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதில் Belluna Lanka முக்கிய பங்காற்றுகிறது. 2026 ஆம் ஆண்டில் Granbell Hotels & Resorts இன் 20ஆவது ஆண்டு நிறைவானது, Belluna நிறுவனத்தின் சர்வதேச விருந்தோம்பல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதுடன், ஜப்பானை தளமாகக் கொண்ட அதன் சர்வதேச வணிகத் தளத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்த வர்த்தகநாமத்தின் கீழ் முதலாவது ஹோட்டலான ‘Shibuya Granbell Hotel’ 105 அறைகளுடன் டோக்கியோவில் திறக்கப்பட்டது. இது பல இடங்களுக்கும் விரிவடைந்துள்ள ஒரு விருந்தோம்பல் வலையமைப்பிற்கு அடித்தளம் அமைத்தது. வாழ்க்கையை வளப்படுத்துதல், வடிவமைப்பு சார்ந்த இடங்கள் மற்றும் நீண்டகால செயற்பாட்டு நிலைபேறான தன்மை ஆகியவற்றின் மூலம் பல ஆண்டுகளாக தனது இருப்பை இந்த வர்த்தகநாமம் விரிவுபடுத்தியுள்ளது. இன்று, ஜப்பான் முழுவதும் 32 ஹோட்டல்களை Belluna இயக்குவதுடன், ஹொக்கைடோ (Hokkaido) பிராந்தியத்தில் மாத்திரம் 2,600 இற்கும் மேற்பட்ட அறைகளுடன் நாட்டின் மிகப்பெரிய விருந்தோம்பல் தளங்களில் ஒன்றைப் பராமரிக்கிறது.
Granbell Hotel Colombo மற்றும் Le Grand Galle ஆகியவற்றின் மூலம், இலங்கையில் தனது விருந்தோம்பல் இருப்பை Belluna நிலைநிறுத்தியுள்ளது. கிரான்பெல் ஹோட்டல் கொழும்பு ஆனது ஜப்பானுக்கு வெளியே இந்த வர்த்தகநாமத்தின் முதலாவது ஹோட்டலாகும். இது ஜப்பானிய வடிவமைப்புக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு குறைந்த இட கட்டடக்கலை அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்ல பகுதியில் அமையவுள்ள புதிய கிரான்பெல் ஹோட்டல் திட்டத்தின் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறையில் தனது இருப்பை நிறுவனம் மேலும் விரிவுபடுத்தி வருகிறது.
இலங்கையிலான தனது முதலீடுகள் மூலம், நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக Belluna ஆதரவளித்து வருகிறது. விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலா தொடர்பான மேம்பாடுகளை உள்ளடக்கிய ஆர்வங்களுடன், விருந்தினர்கள், சமூகங்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு மதிப்பை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலீடுகள் மூலம் நாட்டில் தனது நீண்டகால இருப்பை இக்குழுமம் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.
இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியிலான இந்த முயற்சியில் பங்குபற்றும் ஹோட்டல்களில் விருந்தினர்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான திட்டங்களை Belluna அறிமுகப்படுத்தவுள்ளது. கூட்டாளர்கள், விருந்தினர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட உணவு அனுபவங்கள், விருந்தோம்பல் அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடுகள் இதில் உள்ளடங்கும்.
மேலதிக விபரங்களுக்கு: www.bellunalanka.lk

Super easy registration process and I was playing within minutes. The vibe here is just right. phjili6 is simply the best in the game.
Really enjoy the VIP feel they provide. It makes the whole gaming experience much more exciting. Check out 777betvipfun