Cambridge University Press & Assessment hosted the Cambridge English Leadership Conference (CELC) 2026 in Colombo, bringing together principals, school leaders and English educators to discuss how schools can prepare learners for success in an increasingly AI-enabled world. The conference explored how learner-centred classrooms, effective assessment, data-driven feedback, and strong foundations in communication can help students…
தியாகத்தையும் பக்தியையும் முன்னிறுத்தி தானசாலைமற்றும் வெசாக் பந்தலை இம்முறையும் அமைத்த HNB Finance
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சீனி சம்பல் பனிஸ் தானசாலையை இம்முறையும் நாவல HNB Finance பிரதான அலுவலக வளாகத்தின் முன்பாக பொதுமக்களுக்காகத் திறந்தது. தானசாலையுடன் இணைந்து, அழகிய வெசாக் பந்தலும் காட்சிப்படுத்தப்பட்டது. இது வெசாக் வாரம் முழுவதும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்துவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் வெசாக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிளை மட்டத்தில் HNB Finance பணியாளர்களின் படைப்பாற்றலை மதிப்பிடும் வகையில் வெசாக் பந்தல் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வெசாக் படைப்புகள் HNB Finance கிளை வளாகங்களின் முன்பாக வெசாக் வாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இதனுடன், நாடு முழுவதும் கிளை மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தானசாலைகளும் கடந்த வெசாக் வாரத்தில் காணக்கிடைத்தன என்பது சிறப்பம்சமாகும்.
வெசாக் உற்சவத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, இந்த காலோசிதமான நிகழ்வைப் பாராட்டிய HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “வெசாக் உற்சவத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடத்தி முடித்தமை பாராட்டத்தக்கது. அத்துடன், இந்த உதார கருமங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தன்னார்வத்துடன் முன்வந்து, குழுவுணர்வுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய கிளைகளின் சக பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வாறான உன்னதமான சந்தர்ப்பங்களில் புத்த மதத்தின் போதனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது HNB Finance என்ற நிலையிலுள்ள எங்களின் பொறுப்பாகும். இது எங்களுடன் தொடர்புடைய அனைவரிடமும் மதப்பற்று மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.
வெசாக் பந்தல் படைப்புகள் மூலம் ஆன்மீகத் தெளிவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன், வெசாக் தினத்தில் நாம் பின்பற்றும் உன்னதமான நற்பண்புகளை அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும். இரக்கம், கருணை மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் போன்ற உயர்ந்த பண்புகளை எங்கள் நிறுவன கலாசாரத்துடன் இணைப்பதன் மூலம், எவ்வளவு சவாலான காலகட்டங்களிலும் இலங்கையர்களை வலுப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தொடர்ந்து பங்களிக்க முடியும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.