Landmark 1,000th vehicle delivery reflects growing customer confidence in Hayleys Mobility’s future-ready mobility solutions Hayleys Mobility Limited, the mobility segment of Hayleys Fentons Limited, has marked the delivery of its 1,000th vehicle, a milestone achieved within its first 9 months of operation and a clear reflection of the trust Sri Lankan motorists have placed in…
கனடாவின் 24ஆவது பிரதமர் பதவியேற்றார்.
கனடாவின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று (மார்ச் 14) பதவியேற்றார்.
தனது பதவியை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றார். கனடாவில் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை தொடர்ந்து கார்னி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று (மார்ச் 14) பதவி ஏற்கும் முன்பு மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் இன்று நாம் காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என கனடியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இந்த குழு வழங்கும், சிறிய, அனுபவம் வாய்ந்த அமைச்சரவை வேகமாக செயல்பட்டு, நமது பொருளாதாரத்தையும் கனடாவின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.